×

வாலிபரை மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.20 ஆயிரம் பறித்த 4 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்கி (26). இவர், ஸ்ரீபெரும்புதூரில் தங்கி, மண்ணூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், ராம்கி கடந்த வாரம் இரவு பணியை முடித்துவிட்டு மண்ணூர்-ஸ்ரீபெரும்புதூர் சாலை வழியாக நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக இரண்டு பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல், ராம்கியை வழி மறித்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ராம்கி பணம் தர மறுக்கவே ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி அவரது செல்போனை பிடுங்கி கூகுள்பே மூலம் ரூ.20 ஆயிரம் பணத்தை அவர்களது செல்போன் எண்ணிற்கு பண பரிவர்த்தனை செய்து கொண்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து ராம்கி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்ரீபெரும்புதூர் தேரடி தெருவை சேர்ந்த சுரேஷ் (26), திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (22), கணேஷ் பாபு (19), ஸ்ரீபெரும்புதூர் விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த சரவணன் (21) உள்ளிட்ட 4 பேரை நேற்று கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

The post வாலிபரை மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.20 ஆயிரம் பறித்த 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Sriperumbudur ,Ramki ,Villupuram district ,Mannoor ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது