×

ஆண்டிக்குரும்பலூர் கிராமத்தில் கோயில் மானிய நிலத்தை பட்டா மற்றி தர வேண்டும்

 

பெரம்பலூர்: ஆண்டிக்குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதி கோவிலுக்கு சொந்தமான மானிய நிலத்தை பட்டா மாற்றித்தரக்கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கயர்கன்னி தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஆண்டிக்குரும்பலூர் கிராம பொதுமக்கள் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜா சிதம்பரம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, ஆண்டி குரும்பலூர் கிராமத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் மெய்க்காவல் வேலை செய்து வந்த தர்மலிங்கம்(93) என்பவருக்கு வயது முதிர்வு, கால் முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாக திருக்கோவில் அலுவலர் நேரில் வந்து பார்த்து உங்களுக்கு ஏற்பட்ட உடல் பிரச்சனை காரணமாக உங்களது மகனை மெய்க்காவல் வேலை பார்க்க சொல்லலாம் என கேட்டதற்கு, இந்தவேலை வேண்டாம் வேறு யாரையாவது நியமனம் செய்துகொள்ளுங்கள் எனக் கூறிவிட்டார்.

அதன் பிறகு கோவில் செயல் அலுவலர் எங்களிடம், யாராவது வேறு ஒருவரை வேலைபார்க்க சொல்லுங் கள், பிறகு புதிதாக ஒரு வரை பணிஅமர்த்திக் கொ ள்ளலாம் எனக்கூறினார். அதனைத் தொடர்ந்து ஆ ண்டிக் குரும்பலூர் கிராம த்தில் உள்ள சோலைமுத்து மகன் சதிஷ் என்பவரை பார்த்துக்கொள்ள சொன்னோம். இந்த சம்பவம் நட ந்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால் இதுவரை வேறு யாரையும் நியமிக்கவில்லை. சதீஷ் மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால் எந்தவிதமான பணப்பலனும் அவருக்கு வழங்கப்படவில்லை. எனவே கோவில்பணியைச் செய்வதற்கு மானிய நிலத்தில் பயிர் செய்து கொள்ளுங்கள் எனச் சொல்லிவிட்டோம். இதனை தொடர்ந்து அந்த மானிய நிலத்தில் உழவுவேலை பார்க்கச் சென்ற போது ஏற்கனவே வேலை பார்த்து வந்தவர் இது எனது கொல்லை எனக் கூறி மறிக்கிறார். எனவே பட்டா எண் மாற்றித் தந்து உதவ வேண்டும் என அந்தக் கோரிக் கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

The post ஆண்டிக்குரும்பலூர் கிராமத்தில் கோயில் மானிய நிலத்தை பட்டா மற்றி தர வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Andikurumbalur ,Perambalur ,Antikurumbalur ,Antikurumbalur Village Temple ,Batta Mithi ,
× RELATED கல்குவாரி நீரை பயன்படுத்த நடவடிக்கை