×

42 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 42 மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை, மாற்றுத்திறனாளிகளுக்கான நல ஆணையரகம் இணை இயக்குநர் ஜெயஷீலா, திருவள்ளூர், மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், முன்னாள் பொதுமேலாளர் (பணிகள்) மாவட்ட வருவாய் அலுவலர் அனுசுயா தேவி, சென்னை, மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) முழு கூடுதல் பொறுப்பு, சென்னை, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், பொதுமேலாளர், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரகம், இணை இயக்குநர், மாவட்ட வருவாய் அலுவலர் சாரதா, நாகப்பட்டினம், மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை, அண்ணா பணியாளர் நிர்வாக கல்லூரி, கூடுதல் இயக்குநர் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை, மாவட்ட வருவாய் அலுவலர் குலாம் ஜிலானி பாபா, பெருநகர சென்னை மாநகராட்சி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம்& உடைமை), திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், சென்னை தமிழ்நாடு சாலை, மேம்பாட்டு திட்டம், தனி மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு), வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, காஞ்சிபுரம், சென்னை- கன்னியாகுமரி தொழில் போக்குவரத்து திட்டம், தனிமாவட்ட வருவாய் அலுவலராகவும், திருவாரூர், தமிழ்நாடு நுகர்பொருள், முதுநிலை மண்டல மேலாளர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜராஜன், சென்னை, பெருநகர சென்னை மாநகராட்சி உதவி ஆணையராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னை, பெருநகர வளர்ச்சிக் குழுமம், சென்னை வெளிவட்ட சாலை, மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி, மதுரை, ஆவின் பொதுமேலாளராகவும், திருவள்ளூர், தனி மாவட்ட வருவாய் அலுவலர், (நிலஎடுப்பு- தேசிய நெடுஞ்சாலை) இந்துமதி, திறன் மேம்பாட்டுக்கழகம், மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சந்தை மேலாண்மை குழு, தலைமை நிர்வாக அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், திறன் மேம்பாட்டுக்கழகம் சாந்தி, சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், சந்தை மேலாண்மைக்குழு தலைமை நிர்வாக அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோன்று சென்னை, வக்பு வாரியம், தலைமை செயல் அலுவலர் ஜெய்னுலாப்தீன், சென்னை, செய்தி மக்கள் தொடர்பு இயக்குநரகம், சமூக வலைதளம், இணை இயக்குநராகவும், சென்னை, அண்ணா பணியாளர் நிர்வாக கல்லூரி மாவட்ட வருவாய் அலுவலர் கீதா, சென்னை, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம், பொதுமேலாளர் (பணிகள்), காஞ்சிபுரம், சென்னை- கன்னியாகுமரி தொழில் போக்குவரத்து திட்டம், தனி மாவட்ட வருவாய் அலுவலர் கமலா, சென்னை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மாவட்ட வருவாய் அலுவலர், பொதுமேலாளராகவும், சென்னை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், மாவட்ட வருவாய் அலுவலர், பொதுமேலாளர் பாரதி தேவி, சென்னை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், மாவட்ட வருவாய் அலுவலர், பொது மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

சென்னை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகம், மாவட்ட வருவாய் அலுவலர், பொதுமேலாளர் ஜீவா, கோயம்புத்தூர், நில எடுப்பு (ம) மேலாண்மை தனி மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு, சமூகவலைதளம், இணை இயக்குநர் திவாகர், சென்னை, அண்ணா பணியாளர் நிர்வாக கல்லூரி, மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் இயக்குநராகவும், மனிதவள மேலாண்மைத்துறை, மாவட்ட வருவாய் அலுவலர், ஆய்வு அலுவலர் முருகன், சென்னை, அண்ணா பணியாளர் நிர்வாக கல்லூரி, மாவட்ட வருவாய் அலுவலராகவும், சென்னை, டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம், மாவட்ட வருவாய் அலுவலர், பதிவாளர் ரவிச்சந்திரன், திருச்சி, தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம், முதுநிலை மண்டல மேலாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சென்னை, மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) சாரதா ருக்மணி, தமிழ்நாடு மூலிகை, பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்து கழகம், பொது மேலாளராகவும், சென்னை, பெருநகர வளர்ச்சிக்குமம், சாத்தாங்காடு, இரும்பு மற்றும் எக்கு சந்தை தலைமை நிர்வாக அலுவலர் பரிதா பானு, சென்னை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) பொதுமேலாளராகவும், சென்னை, தமிழ்நாடு, ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், மாவட்ட வருவாய் அலுவலராகவும் (நிலஎடுப்பு) என தமிழ்நாடு முழுவதும் 42 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

 

The post 42 மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிட மாற்றம்: தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : District ,Chief Secretary ,Shiv Das Meena ,Chennai ,Sivdas Meena ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் தடுப்பு: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனை