×

ஐடிஎப் எவன்ஸ்வில்லி ஓபன்: கர்மன் கவுர் சாம்பியன்; சானியாவுக்கு பிறகு சாதித்தார்

எவன்ஸ்வில்லி: அமெரிக்காவில் நடக்கும் ஒரு சர்வதேச டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், சானியா மிர்சாவுக்கு பிறகு பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை கர்மன் கவுர் தண்டி படைத்துள்ளார்.
ஐடிஎப் டபிள்யூ 60 மகளிர் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் எவன்ஸ்வில்லி நகரில் நடந்தது. இத்தொடரின் ஒற்றையர் பைனலில் உக்ரைனின் யுலியா ஸ்ட்ரோடப்ட்சேவா (23வயது, 294வது ரேங்க்) உடன் மோதிய கர்மன் கவுர் (25வயது, 261வது ரேங்க்) 7-5, 4-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஒற்றையர் உலக தரவரிசையில் கர்மன் 51 இடங்கள் முன்னேறி 210வது இடத்தை பிடித்துள்ளார்.

The post ஐடிஎப் எவன்ஸ்வில்லி ஓபன்: கர்மன் கவுர் சாம்பியன்; சானியாவுக்கு பிறகு சாதித்தார் appeared first on Dinakaran.

Tags : ITF Evansville Open ,Karman Kaur ,Sania ,Evansville ,US ,Sania Mirza ,Dinakaran ,
× RELATED கணவர் 3வது திருமணம் செய்த நிலையில்...