×

எலுமிச்சை யூஸ் பண்ணுங்க.. தக்காளி சாப்பிடாதீங்க விலை தானா குறையும்: உபி அமைச்சரின் அடடே யோசனை

லக்னோ: தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டுமானால், மக்கள் தக்காளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று உத்தரபிரதேச பாஜ பெண் அமைச்சர் அறிவுரை கூறியுள்ளார். பருவமழை தாமதம், போதிய உற்பத்தியின்மை, கடுமையான வெப்பம் போன்ற காரணங்களால் நாடு முழுவதும் தக்காளி விலை கிலோ ரூ.150க்கும் மேல் உயர்ந்துள்ளது. கடுமையான விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்தாததால், எதிர்கட்சிகள் ஆளுங்கட்சியை விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் உத்தரபிரதேச மாநில பாஜ பெண் அமைச்சர் பிரதீபா சுக்லா அளித்த பேட்டியில், ‘தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளால், மக்கள் தக்காளி உட்கொள்வதை தவிர்க்கலாம். விலை உயர்ந்த பொருட்களை யாரும் வாங்க வில்லை என்றால், அது தானாக குறைந்துவிடும். அதுபோல் தக்காளியை யாரும் வாங்கவில்லை என்றால், அதன் விலையும் குறையும். தக்காளிக்கு மாற்றாக சமையலில் எலுமிச்சையை பயன்படுத்தலாம். தக்காளி விலை உயர்வை குறைக்க, வீடுகளில் தொட்டிகளில் தக்காளி செடிகளை நடவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு செய்தால் காய்கறிகளை விலைக்கு வாங்க வேண்டியதில்லை’ என்றார். அமைச்சரின் கருத்துக்கு பல்வேறு தரப்பினரும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

The post எலுமிச்சை யூஸ் பண்ணுங்க.. தக்காளி சாப்பிடாதீங்க விலை தானா குறையும்: உபி அமைச்சரின் அடடே யோசனை appeared first on Dinakaran.

Tags : UP Minister ,Lucknow ,Uttar Pradesh ,BJP ,
× RELATED உத்திரபிரதேசத்தில் பேருந்து – லாரி மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு