×

மணிப்பூர் கலவரத்தில் வெறிச்செயலில் ஈடுபடும் பாஜ அரசு: மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டைகரை பகுதியில் இந்திய தேசிய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய மாதர் சங்கத்தின் சார்பாக, பாஜ அரசை கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாநில செயலாளர் துளசி நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் இராஜேந்திரன், டிஒய்எஃப்ஐ மாவட்ட பொருளாளர் லோகநாதன், ஒன்றிய செயலாளர் முனிரத்தினம், அனைத்திந்திய மாதர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் காமாட்சி, பகுதி குழு உறுப்பினர் கௌதமி, மாதர் சங்கத்தின் பகுதி நிர்வாகிகள் நளினி, லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் துளசி நாராயணன் பேசுகையில், ‘‘கடந்த சில மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்தநிலையில் மணிப்பூர் காவல்துறையின் கண் முன்னே பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளின் மீது நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தும் மணிப்பூரின் முதல்வர் பிரேன்சிங் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். என, பாஜ அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்.

The post மணிப்பூர் கலவரத்தில் வெறிச்செயலில் ஈடுபடும் பாஜ அரசு: மாதர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Manipur ,BJP government ,Matar Sangh ,Kummidipoondi ,Indian National Democratic Youth Association ,All India Mathar ,Tiruvallur ,
× RELATED மணிப்பூரில் நிலநடுக்கம்