×

மணிப்பூர் நிகழ்வை தடுக்கத் தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் மணிப்பூர் நிகழ்வை தடுக்கத் தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திருவள்ளூரில் மேற்கு மாவட்ட திமுக மகளிரணி சார்பில் மணிப்பூர் நிகழ்வை தடுக்கத் தவறிய ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பிரியதர்ஷினி அனைவரையும் வரவேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, மாநில மகளிரணி பிரசாரக் குழு செயலாளர் சேலம் சுஜாதா ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி, மாநில, மாவட்ட நிர்வாகிகள் திராவிட பக்தன், ஆதிசேசன், குமரன், உதயமலர் பாண்டியன், ஜெயபாரதி, மிதுன் சக்ரவர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் சிட்டிபாபு, ஆதாம், நகர செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கோவிந்தம்மாள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பொன்னேரி: பொன்னேரியில் மணிப்பூரில் நடந்து கொண்டிருக்கும் கொடூர சம்பவங்களைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் அணி செயலாளர் தேசராணி தேசப்பன், முன்னிலை வகித்தார்.

இதில் மணிப்பூர் சம்பவம் நடந்து 90 நாட்களாகியும் இதில் தொடர்புடையவர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் மாநில பாஜ அரசு செயல்படுகிறது. மாநில பாஜ அரசு இந்த சம்பவத்தை சமூக வளைதளங்களில் வெளியிட்ட நிறுவனங்களை மிரட்டும் வேலையில் இறங்கி உள்ளனர். பெண்களை மானபங்கம் செய்த அத்தனை பேரையும் தூக்கிலிட வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.

கும்மிடிப்பூண்டி சேகர், சிவாஜி, பாஸ்கர் சுந்தரம், கோளூர் கதிரவன், பொன்னேரி ரவிக்குமார், காணியம்பாக்கம் ஜெகதீசன், ஒன்றிய தலைவர் ரவி, மீஞ்சூர் தமிழ் உதயன், மோகன்ராஜ், அலெக்சாண்டர், ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் ரமேஷ் ராஜ், செல்வசேகரன், சக்திவேல், ஆனந்தகுமார், சுகுமாரன், டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மணிபாலன், ராமஜெயம், வெற்றி, தீபம், ரமேஷ், கும்மிடிப்பூண்டி புனிதாவதி வெங்கடாசலபதி, மகளிர் தொண்டரணி ஜெயலலிதா, ஒன்றியஅணி நிர்மலா சீனிவாசன், அமுதா, உமா, வெற்றிச்செல்வி, மீனாட்சி, கலை திமுகவினர் மகளிர் அணியினர் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆவடி: மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் தலைமையில் ஆவடி மாநகராட்சி அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மணிப்பூர் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஒன்றிய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி, ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார், மாவட்ட பொறுப்பாளர்கள், திருவள்ளூர் மத்திய மாவட்டம் திமுக மகளிர் அணி, மகளிரணி தொண்டர்ணி, மாமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மணிப்பூர் நிகழ்வை தடுக்கத் தவறிய ஒன்றிய அரசை கண்டித்து திமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Union government ,Manipur ,Thiruvallur ,DMK Makalirani ,Makalirani ,Dinakaran ,
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...