![]()
சென்னை: நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 14 ஆய்வாளர்கள் உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: உச்ச நீதிமன்றம் நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் பதவி உயர்வு அளிக்கும்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பின்பற்றி பதவி உயர்வு அளிக்கும்படி தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் 2004ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை வெளியிடப்பட்ட உதவி இயக்குநர் பதவி உயர்வு பட்டியல்களில் பணிமூப்பில் உரிய திருத்தங்கள் செய்து ஆய்வாளர்களாக பணிபுரிந்த 3 பேருக்கு உதவி இயக்குநராக பதவி உயர்வு வழங்கி, அரசு ஆணைகள் வெளியிடப்பட்டன. தற்போது, 2022ம் ஆண்டிற்கான காலிப்பணிடங்களுக்கு ஆய்வாளர்களாக பணிபுரியும் 14 பேருக்கு உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post நிலஅளவை மற்றும் பதிவேடுகள் துறையில் உதவி இயக்குனர்களாக 14 ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு appeared first on Dinakaran.

