- ஜனாதிபதி
- குடியரசு
- தௌபட்டி
- முர்மு
- சென்னை
- சென்னைப் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு விழா
- குடியரசு திரௌபதி முர்மு
![]()
சென்னை: சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார். முதன்முறையாக அரசு முறை பயணமாக குடியரசுத் தலைவராக பதவியேற்ற திரௌபதி முர்மு சென்னை வருகிறார். கடந்த முறை தமிழகம் வந்த போது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலை பார்பதற்காகவும், ஈசா யோகா மையத்திற்கும் செல்வதற்காகவும் வந்திருந்தார். முதல்முறையாக தற்போது அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வருகிறார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழா வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதன் காரணமாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அடுத்த மாதம் 6ம் தேதி சென்னை வருகிறார். பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் அவர் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் குடியரசுத் தலைவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக சென்று வரவேற்க உள்ளார். இந்த பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். ஏற்கனவே கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்க முடியாமல் போனது நினைவுகூரத்தக்கது.
The post சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு..!! appeared first on Dinakaran.
