×

டாடா டெக்னாலஜிஸ்  ‘இன்னோவென்ட்’ அறிமுகம்!.. இளம் பொறியியல் மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான மாபெரும் தளம்.

உற்பத்தித் துறையில் எதிர்கொள்ளும் யதார்த்த வாழ்வின் சவால்களுக்கு தீர்வு காணும் விதமாக பெண் பொறியாளர்கள் மற்றும் மாற்றுத் திறன் கொண்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுவினர் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள பொறியியல் மாணவர்களின் கண்டுபிடிப்புகளுக்கான போட்டிக்கான திட்டங்களுக்கான (projects) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை, 17 ஜூலை 2023: உலக அளவிலான பொறியியல் மற்றும் உற்பத்தி மேம்பாட்டு டிஜிட்டல் சேவை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் [Tata Technologies, <https://www.tatatechnologies.com/in/> a global engineering and product development digital services company,] டாடா டெக்னாலஜிஸ் இன்னோவென்ட் [Tata Technologies InnoVent] என்ற இணையதளத்தை தொடங்க உள்ளதாக அறவித்துள்ளது. இந்தியாவில் உள்ள இளம் பொறியியல் மாணவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், உற்பத்தித் துறையில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான கண்டுபிடிப்புகள் மூலம் தீர்வுகளை காண்பதற்குமான ஒரு புத்தாக்க தளமாக டாடா டெக்னாலஜிஸ் இன்னோவென்ட் தளத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் பொறியியல் குறித்த அதன் தொலை நோக்குப் பார்வையானது உற்பத்தி நிறுவனங்களுக்கு சிறந்த தயாரிப்புகளை உருவாக்கவும், வடிவமைக்கவும், மேம்படுத்தவும் உதவுவதன் வாயிலாக ஒரு சிறந்த உலகத்திற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதற்கான அ்தன் சமூக நலன் சார்ந்த பொறுப்புணர்வை உள்ளடக்கியுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு சர்வதேச நிறுவனம் என்ற முறையில், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு குழுக்களின் ஒட்டு மொத்த நிபுணத்துவத்தை நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கலான பெ்ாறியியல் சவால்களை சமாளிக்க உடனுக்குடன் ஒத்துழைப்பு அளிக்கிறோம். இன்னோவென்ட் இணையதளத்தை அறிமுகம் செய்ததன் வாயிலாக, எங்கள் கண்டுபிடிப்பு தொடர் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், எதிர்காலத்திற்கான புதுமையான தீர்வுகளை காண்பதற்கு அ்டுத்த தலைமுறை பொறியாளர்களை ஊக்குவிக்கிறோம்.
இந்தியா முழுவதும் உள்ள 3-வது மற்றும் 4-வது ஆண்டு பயிலும் பொறியியல் மாணவர்களை இந்தப் போட்டியில் பங்கேற்க இன்னோவென்ட் அழைப்பு விடுத்துள்ளது. இந்த போட்டிக்கான திட்டங்கள் (projects) என்பவை மின்சார வாகனங்கள், தானியியங்கி வாகனங்கள், இணையப்பாதுகாப்பு, டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) பொறியியல், ஸ்மார்ட் உற்பத்தி, இணையம் சார்ந்த செயல்பாடுகள், தயாரிப்புகள், மென்பொருட்கள் என பல அம்சங்களை உள்ளடக்கிய இண்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (Internet of Things (IoT)) உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட ஊக்கமளிக்கும். புதுமையான கருவிகளையும் தொழில் நுட்பங்களையும் கொண்டு இறுதி செய்யப்பட்ட புரொஜக்ட் குழு(க்களை)வை டாடா டெக்னாலஜிஸ் வழிநடத்தும். மிகச் சிறப்பாக செயல்பட்டு முன்னிலை வகிக்கும் குழு(க்களை)வை குறிப்பிட்ட துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் (Subject Matter Experts (SMEs)) ஆலோசனைகள் கூறி வழிநடத்திச் செல்வர். சிறப்பு திறன்களுடன் கூடிய பெண் பொறியாளர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு சிறப்பு முன்னுரிமை அளித்து பன்முகத்தன்மை, புதுமை, சாத்தியப்பாடு, உருவாக்கும் தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டங்கள் (projects) மதிப்பீடு செய்யப்படும். வெற்றி பெறும் முதல் மூன்று குழுக்கள் ஒட்டுமொத்தமாக ரூ.4.5 லட்சம் மதிப்பிலான ரொக்கப் பரிசை பெறுவர். மேலும் அதில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுக்கு டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சியும் (இன்டர்ன்ஷிப்) அளிக்கப்படும்.
இன்னோவென்ட் புரொஜக்ட் குறித்த கூடுதல் விவரங்களை https://www.tatatechnologies.com/in/innovent/ தெரிந்து கொள்ளலாம்.  மேலும் ப்ரொஜக்ட் சமர்பிப்பதற்கான கடைசி நாள் ஆகஸ்ட் 31, 2023.
டாடா டெக்னாலஜிஸ் இன்னோவென்ட் இணையதள தொடக்க நிகழ்ச்சியில், டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் திரு. வாரன் ஹாரீஸ் (Mr Warren Harris, MD and CEO Tata Technologies) பேசுகையில், “கல்வியாளர்களுடன் இணைந்து, புதிய கண்டுபிடிப்புகளை கற்றுக் கொள்வதற்கும், படைப்பாற்றலை வெளிப்படுத்துவதற்கும், புதிய தீர்வுகளை கண்டடைவதற்கும் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு ஆதரவு அளிப்பதன் வாயிலாக நமது இளைஞர்களுக்கு ஒரு சிறந்த உலகத்தை உருவாக்கித் தர வேண்டும் என்ற எங்களது பொறுப்புணர்வை டாடா டெக்னாலஜிஸ் பிரதிபலிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, உற்பத்தித் துறை எதிர்கொள்ளும் உண்மையான சவால்களை நாங்கள் கண்டறிந்துள்ளோம். எங்களது வழிகாட்டுதலில் புதுமை படைக்க உள்ள கண்டுபிடிப்புக்கான புரொஜக்ட் விண்ணங்களை பெற ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
டாடா டெக்னாலஜிஸ் இன்னோவென்ட் அறிமுகம் குறித்து தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்ட, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக துணைத்தலைவர் மற்றும் சந்தைப்படுத்துதல், வர்த்தக செயல்பாட்டு பிரிவின் உலகளாவிய தலைவர் திரு. சந்தோஷ் சிங் (Mr. Santosh Singh, EVP & Global Head Marketing and Business Excellence, Tata Technologies) கூறுகையில், “டாடா டெக்னாலஜிஸ் இன்னோவென்ட் இணையதளத்தின் அணுகுமுறையானது எதையும் செய்து பார்த்து விடலாம் என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே டாடா டெக்னாலஜியைப் பொறுத்தவரையில்,  ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை ஆராய்ந்தறியவும், அதன் மூலம் புதிய தீர்வுகளை கண்டடையவும், மேலும் எங்களது வாடிக்கையாளர்களின் வர்த்தக சவால்களை எதிர்கொள்ளவும் தூண்டுகிறது.
இன்னோவென்ட் மூலமாக, உற்பத்தித் துறை சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள, சமீபத்திய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஆக்கப்பூர்வமான தீர்வுகளை கண்டடைய, இந்தியாவில் உள்ள இளம் பொறியியல் மாணவர்களை ஊக்குவிக்கும் ஒரு இணையதளத்தை வழங்க விரும்புகிறோம். எதையும் செய்து பார்த்து விடலாம் என்ற எண்ணமும் புதுமையான கண்டுபிடிப்புகளை உருவாக்கக் கூடிய முனைப்புடன் முன்னிலை வகிக்கும் குழுக்களுக்கு ஆதரவும் வழிகாட்டுதலும் அளிக்க நாங்கள் திட்டமிட்டு்ள்ளோம். பெண் ஆராய்ச்சியாளர்கள், மாற்றுத் திறனாளிகளைக் கொண்ட குழுவினரின் பங்கேற்பை நான் குறிப்பாக எதிர்பார்க்கிறோன்” என்றார்.
டாடா டெக்னாலஜிஸ் குறித்து:
டாடா டெக்னாலஜிஸ் என்பது சர்வதேச அளவில் உற்பத்தி பொறியியல் மற்றும் டிஜிட்டல் சேவைகளை அளிக்கும் ஒரு நிறுவனமாகும். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தயாரிப்புகளை அளிப்பதன் மூலமாகவும், சிறப்பான அனுபவத்தை உருவாக்கி தருவதன் மூலமாகவும், உலகில் வாகன போக்குவரத்து, விமானம், கட்டுமானம், வேளாண்மை ஆகிய துறைகளுக்கு உதவுவதன் வாயிலாக எங்களது இலட்சியத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தி வருகிறோம். சிறப்பானதை நாட விரும்பும் வணிக நிறுவனங்களின் முதன்மையான விருப்பத் தேர்வாக டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் விளங்குகிறது. பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் அனைத்து வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக் கூடியதுமான சிறந்த தயாரிப்புகளை உருவாக்கி, மேம்படுத்தி சிறப்பானவற்றை அளிப்போம் என உற்பத்தி நிறுவனங்கள் எங்களை நம்பியிருக்கின்றன.  இதன் மூலம்  சிறந்த உலகை உருவாக்கும் நோக்கத்துடன் #EngineeringABetterWorld என்ற எங்கள் லட்சியத்தை அடைய அவை உதவுகின்றன. மேலும் கூடுதல்  தகவல்களுக்கு <https://www.tatatechnologies.com/in> என்ற இணையதளத்தை சொடுக்கி அறிநது கொள்ளலாம். எங்களது அண்மை தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  Instagram <https://www.instagram.com/tatatechnologies/>, LinkedIn <https://www.linkedin.com/company/tata-technologies/>, Twitter <https://twitter.com/TataTech_News>, Facebook <https://www.facebook.com/TataTechnologiesAPAC/>  & YouTube <https://www.youtube.com/user/tatatechnologies>ஆகியவற்றில் பின் தொடரலாம்.

The post டாடா டெக்னாலஜிஸ்  ‘இன்னோவென்ட்’ அறிமுகம்!.. இளம் பொறியியல் மாணவர்களின் புதுமையான கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் வகையிலான மாபெரும் தளம். appeared first on Dinakaran.

Tags : Tata Technologies ,Tata Technologies' Innovent ,
× RELATED டாடா டெக்னாலஜீஸ் InnoVent 2023: வெற்றியாளர்களை...