×

மாநிலங்களவையில் அமளி; பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைப்பு: ஆம் ஆத்மி எம்பி மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்

டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய்சிங்கை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக மாநிலங்களவைதலைவர் ஜக்தீப் தங்கர் அறிவித்தார். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தி 3ஆவது நாளாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

மணிப்பூரில் இரண்டு இன குழுக்களுக்கு இடையே மே 3ம் தேதி முதல் நடைபெற்றுவரும் வன்முறை சம்பவங்களால் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானனோர் படுகாயமடைந்தனர். தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு, பாலியல் பலாத்காரம் போன்ற கொடூரங்கள் அரங்கேறி வருவதால், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். ராணுவம், மாநில அரசின் போலீசார் பாதுகாப்பில் இருந்தும், மணிப்பூரில் பதற்றங்கள் குறையவில்லை. கடந்த சில தினங்களுக்கு மணிப்பூரில் வசிக்கும் மெய்டீஸ் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பான வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க எதிர்கட்சியினர் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 20,21-ம் தேதிகளில் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கியது. 2 நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று தொடங்கியது. மணிப்பூர் கொடூரம் குறித்து விளக்கமளிக்க வேண்டி எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வரும் நிலையில், பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வரவில்லை.

அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, மணிப்பூர் கொடூரம் குறித்து விவாதிக்க வேண்டி எதிர்க்கட்சியினர் தொடர் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருவதால் மக்களவை, மாநிலங்களவை பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக அவை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்தார்.

The post மாநிலங்களவையில் அமளி; பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைப்பு: ஆம் ஆத்மி எம்பி மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Amari ,Aadmie MB ,Delhi ,Aadmi ,Sanjayssing ,Amali ,Manipur ,Aadmy ,MB ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...