×

பெரம்பலூர் அருகே வேன் கவிழ்ந்து 90,000 முட்டைகள் ‘டமார்’

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே சிமென்ட் லாரி மோதி முட்டை வேன் கவிழ்ந்த விபத்தில் 90ஆயிரம் முட்டைகள் உடைந்து மஞ்சள் கரு சாலையில் ஆறாக ஓடியது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து 90 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக் கொண்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் நோக்கி நேற்று காலை வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (50) என்பவர் ஓட்டி வந்தார். லோடுமேனாக நாமக்கல்லை சேர்ந்த பெரியசாமி (45) என்பவர் உடன் வந்தார்.

திருச்சி மாவட்டம் துறையூர்-பெரம்பலூர் சாலையில் செஞ்சேரி புறவழிச்சாலை பகுதியில் வேன் வந்தது. அப்போது புறவழிச்சாலை வழியாக துறையூர் நோக்கி சிமென்ட் ஏற்றி வந்த லாரி வேகமாக சாலையை கடக்க முயன்றபோது வேன் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் சாலையில் வேன் கவிழ்ந்தது. வேனில் இருந்த முட்டைகள் உடைந்து மஞ்சள் கரு சாலையில் ஆறாக ஓடியது.

இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீச தொடங்கியது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். சாலையில் கவிழ்ந்து கிடந்த முட்டை வேனை கிரேன் மூலம் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதுகுறித்து முட்டை வேன் டிரைவர் செந்தில்குமார் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரம்பலூர் அருகே வேன் கவிழ்ந்து 90,000 முட்டைகள் ‘டமார்’ appeared first on Dinakaran.

Tags : Perambalur ,
× RELATED மண்வளம் காத்து அதிக மகசூல் பெற...