×

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சாவூரில் தயாராகும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் : வடமாநில கலைஞர்கள் மும்முரம்

திருவிடைமருதூர் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சாவூரில் வடமாநில கைவினை கலைஞர்கள், பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை தயார் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் முழுமுதற்கடவுள் என போற்றப்படும் விநாயக பெருமானுக்கு உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் வரும் செப்டம்பர் 18ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் குடியிருப்புகள், பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வார்கள். 3வது நாளில் விநாயகர் சிலைகளை திறந்தவெளி வாகனங்களில் வைத்து அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.

இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே சீனிவாசநல்லூர் பைபாஸ் சாலையில் ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 15 குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக முகாமிட்டு விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காகிதக்கூழ், தேங்காய் நார், மூங்கில் குச்சிகள் கொண்டு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளில் வாட்டர் கலர் தீட்டப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 1 அடி முதல் அதிகபட்சமாக 11 அடி உயரம் வரை பலவித வாகனங்கள், வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ₹1000 முதல் ₹25 ஆயிரம் வரை விற்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஒரு சதுரடி ₹1,500 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இவற்றை பல்வேறு மாவட்டங்களில் இருந்து விநாயகர் விழாக்குழுவினர் ஆர்வமுடன் வாகனங்களுடன் வாங்கி செல்கின்றனர் என்றனர்.

The post விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தஞ்சாவூரில் தயாராகும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் : வடமாநில கலைஞர்கள் மும்முரம் appeared first on Dinakaran.

Tags : Glamantha Vinayagar ,Thanjavur ,Vineyagar Chadurthi ,North ,Thiruvidimarthur ,Vineyagar Chaturthi ,North State ,Glamantha Vinayakar ,Vinayakar Chadurthi ,Thummuram ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...