- பட்செல்
- தமிழ்நாடு-
- கேரளா
- புட்செல் காவல் குமுலி
- கம்பம்மேட்டு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புட்செல் காவல்துறை
கம்பம் : தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு விற்பனைக்காக கடத்தி செல்லப்படும் ரேஷன் அரிசியை தடுப்பதற்காக புட்செல் போலீசார் குமுளி, கம்பம்மெட்டு சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசிக்கு கேரளாவில் தனி மவுசு உண்டு. கேரள எல்லையில் ரேஷன் அரிசியை கேரள வியாபாரிகள் கிலோ ரூபாய் 15 முதல் 18 வரை விலைக்கு வாங்குகின்றனர்.
குறிப்பாக தமிழக எல்லை பகுதியான கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் மற்றும் தேனி, போடி பகுதிகளில் வழங்கப்படும் ரேஷன் அரிசியை கேரள வியாபாரிகள் வீடு வீடாக சென்று, படி ஒன்று ரூ.10 ெகாடுத்து வாங்குகின்றனர். அதை 50 கிலோ சிப்பமாக மூட்டையாக மாற்றி அதை கேரளாவிற்கு ஜீப் மற்றும் லாரிகளில் கடத்தி செல்கின்றனர்.கேரள எல்லையான கம்பமெட்டு மற்றும் குமுளி வரை மட்டுமே ரேஷன் அரிசி கடத்தி சென்றால் போதுமானது. அங்கிருந்து எர்ணாகுளம், திருச்சூர், காலடி போன்ற இடங்களில் உள்ள அரிசி மில்களுக்கு கேரள அரிசி வியாபாரிகளால் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு ரேஷன் அரிசி பாலீஸ் செய்து பட்டை தீட்டி, தரம் பிரிக்கப்பட்டு, பேக்கிங் செய்யப்பட்டு தரமான இட்லி ரிசியாகவும் ,சாப்பாட்டு அரிசியாகவும் 5, 10 மற்றும் 25 கிலோ மூட்டையாக மாற்றி கிலோ ரூ.30 முதல் 40 வரை மறு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தும் கும்பல்கள் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 வரை மட்டுமே அதிகளவில் கடத்தி செல்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவது தொடர்பாக வந்த புகாரின் எதிரொலியாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை மதுரை மண்டலம் காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா உத்தரவின் படி, மதுரை உட்கோட்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் ஆலோசனையின் பேரில், உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் ஆய்வாளர் சுப்புலெட்சுமி, சார்பு ஆய்வாளர்கள் சிவபிரகாசம், பொன் குணசேகரன் மற்றும் காவல்துறையினர் குமுளி , கம்பமெட்டு மற்றும் போடி மெட்டு ஆகிய சோதனை சாவடிகளில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு திடீர் வாகனத் தணிக்கை செய்தனர்.
The post தமிழக-கேரளா எல்லை சோதனை சாவடிகளில் புட்செல் போலீசார் வாகன சோதனை appeared first on Dinakaran.