×

கொங்கர்பாளையம் கிராமத்தில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி

கோபி : கோபி அருகே கொங்கர்பாளையம் கிராமத்தில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலியான சம்பவம், அப்பகுதி விவசாயிகளிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொங்கர்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (55). விவசாயியான இவர் ஆடு மற்றும் மாடுகள் வளர்த்து வருகிறார். ராமசாமி தனது விவசாய தோட்டத்தில் பசு மாட்டுடன் பிறந்து 15 நாட்களே ஆன பசு கன்றுக்குட்டியை வளர்த்து வந்தார்.

இந்நிலையில் இந்த கன்றுக்குட்டி காணாமல் போனது. அதைத்தொடர்ந்து காணாமல்போன கன்றுக்குட்டியை ராமசாமி தேடி உள்ளார். அப்போது காணாமல் போன இடத்தில் இருந்து சிறிது தொலைவில் வனப்பகுதி அருகே உள்ள விவசாய நிலத்தில், சோளம் பயிரிடப்பட்டு இருந்த காட்டில் கன்றுக்குட்டி இறந்து நிலையில் கிடந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அவர் அடைந்தார். இது குறித்து விவசாயி ராமசாமி டி.என். பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தா

ர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டி.என்.பாளையம் வனச்சரகர் மாரியப்பன், வனவர் பழனிச்சாமி உள்ளிட்ட வனத்துறையினர் கன்றுக்குட்டி இறந்த கிடத்த இடத்தில் கிடைத்த கால் தடங்களை வைத்து கன்றுக்குட்டியை கொன்றது சிறுத்தைதான் என உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து அங்கு சிறுத்தை நடமாட்டம் குறித்து கண்காணிக்க கேமிராக்கள் பொருத்தி உள்ளனர்.

ஏற்கனவே கொங்கர்பாளையம், கணக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதியில் ஆடு, நாய்களை சிறுத்தை வேட்டையாடி வரும் நிலையில், தற்போது கொங்கர்பாளையத்தில் கன்றுக்குட்டியை கடித்து கொன்றுள்ளது மேலும் அதிர்ச்சியை அதிகப்படுத்தியுள்ளது. இதையடுத்து, கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என விவசாயிகள், வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கொங்கர்பாளையம் கிராமத்தில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Kogarbalayam ,Kobi ,Gobi ,Cougaranam Village ,
× RELATED பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...