×

கல்லூரி மாணவி டிரைவருடன் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்

*உயிருக்கு பாதுகாப்பு கேட்டு மனு

விழுப்புரம் : கரூர் கல்லூரி மாணவி விழுப்புரத்தை சேர்ந்த தனது காதல் கணவருடன் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு எஸ்.பி அலுவலகத்தில் தஞ்சமடைந்து மனு கொடுத்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம்நச்சலூரை சேர்ந்த பாலன் மகள் பாமா (19). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்த டிரைவரான சையத்முஷ்ரப் என்பவரை கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாமா வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய அவர், கீழ்பெரும்பாக்கம் அம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே தனது பெற்றோரால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நேற்று எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து எஸ்பியிடம் பாமா அளித்த மனுவில், நாங்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தோம். நான் சையத்முஷ்ரப்பை காதலிப்பதை தெரிந்துக்கொண்ட பெற்றோர் வேறோருவருடன் கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்றனர்.

இந்நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய நான் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். எனது தந்தை அரசியல் செல்வாக்கு உள்ளவர். அவரால் எனக்கும், என் கணவருக்கும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே உரிய பாதுகாப்பு வழங்கி எங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post கல்லூரி மாணவி டிரைவருடன் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : Manu ,Villupuram ,S.B. Shelter ,Dinakaran ,
× RELATED ‘சான்றிதழ் வேணும்னா என் கூட சந்தோஷமா...