×

எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம்

 

பழநி, ஜூலை 24: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாருக் ஆகியோரின் வீட்டில் நேற்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து பழநியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் கைசர் தலைமை வைத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழ் புலிகள் கட்சிகளின் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் ஒன்றிய அரசை கண்டித்தும், என்ஐஏ அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The post எஸ்டிபிஐ கட்சியினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : STBI party ,Palani ,STBI ,Nellie Mubarak ,National Executive Committee ,Thanjavur ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி