×

ரெப்கோ வங்கியில் முதலீடு சேகரிப்பு விழா

 

சிவகங்கை, ஜூலை 24: இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கியில் முதலீடுகளுக்கு கூடுதல் வட்டி வழங்கும் சிறப்பு முதலீடு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு முதலீடு சேகரிப்பு விழா 21.07.2023 முதல் 31.08.2023 வரை கொண்டாடப்படுகிறது. காரைக்குடி ரெப்கோ வங்கியின் கிளையில் இவ்விழா 21.07.2023 அன்று 12 மணியளவில் தொடங்கி வைக்கப்பட்டது. இதில் வங்கியின் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அவ்விழாவில் அதன் உதவிப் பொதுமேலாளர் ஆர்.பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசுகையில், முதலீடுகளுக்கு அதிகப்படியாக வட்டி வழங்கும் வகையில் ரெப்கோ 400 மற்றும் ரெப்கோ 12 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், 400 நாட்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 8.25 % ம் மற்றவர்களுக்கு 7.75%ம் மற்றும் 12 மாதங்களுக்கு மூத்த குடிமக்களுக்கு 8.05%ம் மற்றவர்களுக்கு 7.55%ம் வழங்கப்படுகிறது.

இது தவிர நிரந்தர வைப்பு திட்டத்தில் 90 நாட்கள் முதல் 364 நாட்கள் வரை மூத்த குடிமக்களுக்கு 7%ம் மற்றவர்களுக்கு 6.50%ம் வழங்கப்படுகிறது. மேலும் அடமானக்கடன் ரூ.2 லட்சம் முதல் 10 கோடி வரை வியாபார தேவைக்கும் மற்ற தேவைக்களுக்கும் வழங்கப்படுவதாகவும், நகைக்கடன் கிராம் 1க்கு 4600 வரை வழங்கப்படுகிறது. இந்த கடனை வங்கியின் அனைத்து வேலைநாட்களிலும் உச்ச வரம்பின்றி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார்.

The post ரெப்கோ வங்கியில் முதலீடு சேகரிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : collection ,REBCO BANK ,Sivagangai ,Repco Bank ,Dinakaran ,
× RELATED தொழில் நுட்பங்களை பின்பற்றினால் எள்ளில் அதிக மகசூல் பெறலாம்