×

சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 109.35 அடியாக உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி பரவலாக பெய்த மழையின் காரணமாக

தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அடுத்துள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்று 109.35 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். இந்த அணைக்கு விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப்பயணிகள் குடும்பத்துடன் வந்து அணை மற்றும் அருகே உள்ள பார்க்கில் சுற்றிப்பார்த்து மகிழ்ந்து பொழுதுபோக்கி செல்கின்றனர்.

இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயம் பாசனத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர் மட்டம் 100 அடியாக குறைந்தது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலும், சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நேற்று சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 109.35 அடியாக எட்டி கடல்போல் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலாப்பயணிகள், விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் விடுமுறை தினமான நேற்று குறைந்தளவே சுற்றுலாப்பயணிகள் வருகை இருந்தது குறிப்பிடத்தக்கது. தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 109.35 அடியாக உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

The post சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 109.35 அடியாக உயர்ந்தது விவசாயிகள் மகிழ்ச்சி பரவலாக பெய்த மழையின் காரணமாக appeared first on Dinakaran.

Tags : Chatanur Dam ,Thandarampattu ,Thiruvannamalai… ,Dinakaran ,
× RELATED சாத்தனூர் அணையில் இருந்து 1570 கனஅடி...