×

புத்தக திருவிழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் மதுக்கூர் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கல்

பட்டுக்கோட்டை: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த மதுக்கூர் வட்டாரத்திற்கு 1,400 ஏக்கருக்கு குறுவை சாகுபடி தொகுப்பு திட்ட இலக்கு வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் மதுக்கூர், பெரியகோட்டை, ஆலத்தூர், வேப்பங்குளம், இளங்காடு மற்றும் மண்டலக்கோட்டை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மதுக்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் ஆவணங்கள் பரிசீலனையின் அடிப்படையில் 23 விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஏக்கருக்கு ஒரு மூட்டை யூரியா, ஒரு மூட்டை டிஏபி மற்றும் 25 கிலோ பொட்டாசு உரம் ஆகியவை ரூபாய் 2,466 மதிப்பில் வழங்கும் நிகழ்ச்சி மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சாவூர் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தமிழ்நங்கை மற்றும் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் பழனீஸ்வரி, மதுக்கூர் கூட்டுறவு சங்க செயலாளர் வீரக்குமார், மதுக்கூர் வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி ஆகியோர் விவசாயிகளுக்கு உரங்களை வழங்கினர். மதுக்கூர் வேளாண் உதவி அலுவலர் பூமிநாதன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். குறுவை சாகுபடி செய்துள்ள பிற விவசாயிகளும் காலத்தே தங்கள் ஆவணங்களுடன் வேளாண் உதவி அலுவலரை அணுகி மானியத்தில் உரங்களை பெற்றுக் கொள்ள வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.

The post புத்தக திருவிழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் மதுக்கூர் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் உரம் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Book Festival ,Madhukur ,Pattukottai ,Kuruvai Cultivation ,Madukur ,Pattukottai, Thanjavur district ,Dinakaran ,
× RELATED மதுக்கூர் அருகே அத்திவெட்டியில் வேளாண் கண்காட்சி