×

திருக்குவளையில் கலைஞர் பிறந்த வீட்டில் படத்திற்கு திமுக மாணவர் அணி நிர்வாகிகள் மாலை அணிவிப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்ட திமுக மாணவர் அணி நிர்வாகிகள் கலைஞர் பிறந்த இடமான திருக்குவளை சென்று அரவது படத்திற்கு மாலை அணிவித்தனர். நாகப்பட்டினம் மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளராக உதயக்குமார், துணை அமைப்பாளர்களாக எலக்ட்ரிக்கல் பாலா, செந்தாமரைசெல்வன், பாரி, மணிகண்டன், உதயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் திமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் கவுதமனை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர். இதை தொடர்ந்து கலைஞர் பிறந்த திருக்குவளை இல்லத்திற்கு சென்றனர். அங்குள்ள அவரது படத்திற்கு மாலை அணிவித்தனர்.

The post திருக்குவளையில் கலைஞர் பிறந்த வீட்டில் படத்திற்கு திமுக மாணவர் அணி நிர்வாகிகள் மாலை அணிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvalli ,Djaghagam ,Nagapattinam ,Nagapattinam District ,Dizhagagam ,Thirukuvalla ,Kanjaka ,
× RELATED நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி...