×

தூத்துக்குடி சிவன் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் அம்பாளுக்கு வளைகாப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோயில் ஆடிப்பூரத் திருவிழாவில் அம்பாளுக்கு நடந்த வளைகாப்பு வைபவத்தை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். ஆடிப்பூரத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிவன் கோயில்களில் மற்றும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் வளைகாப்பு வழிபாடு விமரிசையாக நடந்தது. இதே போல் தூத்துக்குடி சிவன் கோயில் எனப்படும் பிரசித்திபெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து அம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் பக்தர்கள் புடைச்சூழ நடந்தது. இதையொட்டி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, வளைகாப்பு வைபவத்தைத் தொடர்ந்து இதில் திரளாகப் பங்கேற்ற பெண்கள் உள்ளிட்ட பக்தர்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

The post தூத்துக்குடி சிவன் கோயில் ஆடிப்பூர திருவிழாவில் அம்பாளுக்கு வளைகாப்பு appeared first on Dinakaran.

Tags : Ambal ,Tuticorin Shiva Temple Aadipura festival ,Thoothukudi ,Thoothukudi Shiva Temple Adipur festival ,Adipuram ,Thoothukudi Shiva Temple Adipuram Festival baby shower for Ambal ,
× RELATED சங்கரன்கோவில்  கோமதி அம்பாள் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி