×

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தாராபுரத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

 

திருப்பூர், ஜூலை 24: திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டல தலைவருமான இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:திமுக தலைமை ஆணைக்கிணங்க மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்து சென்ற சம்பவம் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தியது. இதனை தடுக்க தவறிய ஒன்றிய மற்றும் அம்மாநில அரசுகளை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பாக இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தாராபுரம் அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் தெற்கு மாவட்ட தி.மு.கழகத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் மற்றும் சார்பு அணியின் நிர்வாகிகள் கலந்துகொள்வதோடு, பெண்கள், பொதுமக்கள், மகளிர் அணியினர் பெருந்திரளாக கலந்துகொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் கலவரத்தை கண்டித்து தாராபுரத்தில் இன்று திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Tarapuram ,Manipur ,Tirupur ,Tirupur South District ,Corporation 4th Zone ,President ,L. Padmanaban ,Dinakaran ,
× RELATED காதலனுடன் தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய அண்ணன்