×

மணவாளநகரில் 1,847 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் காந்தி வழங்கினார்

 

திருவள்ளூர்: மணவாளநகரில் 1,847 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் காந்தி வழங்கினார். திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் உள்ள கேஇஎன்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 1,847 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.89.03 லட்சம் மதிப்பில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். திருவள்ளூர் தொகுதி எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) சுகபுத்ரா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, நகர மன்றத்தலைவர் உதயமலர் பாண்டியன், துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 1,847 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது, தமிழ்நாட்டில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு நிகராக மட்டுமல்லாது, தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு மாணவ, மாணவிகளுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கி, அவர்களது கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவ, மாணவிகள் நன்றாக படித்து உயர்கல்வியில் சேர்ந்து பட்டங்களைப் பெற்று வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட அவைத்தலைவர் திராவிட பக்தன், மாநில விவசாய அணி துணை செயலாளர் ஆதிசேஷன், ஒன்றியச் செயலாளர் அரிகிருஷ்ணன், ரமேஷ், மகாலிங்கம், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், கொப்பூர் திலிப்குமார், தாடி நந்தகோபால், ஊராட்சி துணைத் தலைவர் மோகனசுந்தரம், காஞ்சிப்பாடி சரவணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் திலீபன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் நன்றி கூறினார்.

The post மணவாளநகரில் 1,847 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்: அமைச்சர் காந்தி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Manawalanagar ,Minister Gandhi ,Thiruvallur ,Manavalanagar ,KENC ,Tiruvallur… ,Minister ,Gandhi ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்