×

இஸ்ரேல் பிரதமருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தம்

டெல் அவிவ்: உடல் நலம் பாதிக்கப்பட்ட இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ( 72) கடந்த வாரம் சுற்றுலா தலமான சீ ஆப் கலிலிக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவர் ஷெபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை முடிந்து மறுநாள் வீடு திரும்பினார். அவரது மருத்துவ பரிசோதனை முடிவுகள் இயல்பாக உள்ளன. அவர் நலமுடன் உள்ளார் என அவரது அலுவலகம் தெரிவித்தது. அவருக்கு இதய கண்காணிப்பு கருவியும் பொருத்தப்பட்டது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் எச்சரிக்கை தெரிவிக்கும் வகையில் கருவி ஒலித்தது. இதனால், உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இந்நிலையில் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்துவதற்கான அறுவை சிகிச்சை நேற்று நடந்தது . நெதன்யாகு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், இப்போது நான் நன்றாக உணர்கிறேன். மருத்துவரின் அறிவுரையை கேட்டு செயல்படுகிறேன் என தெரிவித்துள்ளார். அந்த நாட்டில் நீதித்துறையை மறு சீரமைக்கும் திட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்த உள்ள நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post இஸ்ரேல் பிரதமருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தம் appeared first on Dinakaran.

Tags : PM ,Tel Aviv ,Benjamin Netanyahu ,Israel ,Dinakaran ,
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!