×

255 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்: சிராஜ் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல்

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்திய அணியுடனான 2வது டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 255 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச… இந்தியா முதல் இன்னிங்சில் 438 ரன் குவித்தது. கோஹ்லி அதிகபட்சமாக 121 ரன், கேப்டன் ரோகித் 80, ஜடேஜா 61, ஜெய்ஸ்வால் 57, அஷ்வின் 56 ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோச், வாரிகன் தலா 3, ஹோல்டர் 2, கேப்ரியல் 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 3ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 229 ரன் எடுத்திருந்தது.கேப்டன் பிராத்வெயிட் 75, சந்தர்பால் 33, மெக்கன்ஸி 32, பிளாக்வுட் 20, ட சில்வா 10 ரன்னில் பெவிலியன் திரும்பினர். அதனேஸ் 37, ஹோல்டர் 11 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அதனேஸ் மேற்கொண்டு ரன் எடுக்காமல் முகேஷ் குமார் வேகத்தில் எல்பிடபுள்யு ஆனார்.

ஹோல்டர் 15, ஜோசப் 4, ரோச் 4 ரன், ஷனான் கேப்ரியல் (0) ஆகியோர் சிராஜ் வேகத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுக்க, வெஸ்ட் இண்டீஸ் 255 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது (115.4 ஓவர்). வாரிகன் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் சிராஜ் 23.4 ஓவரில் 6 மெய்டன் உள்பட 60 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகேஷ் குமார், ஜடேஜா தலா 2, அஷ்வின் 1 விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து, 183 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால், கேப்டன் ரோகித் அதிரடியாக விளையாடி ரன் சேர்க்க, இந்தியா வலுவான முன்னிலை பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

The post 255 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்: சிராஜ் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தல் appeared first on Dinakaran.

Tags : West Indies ,Siraj ,Port of Spain ,India ,Dinakaran ,
× RELATED ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக...