×

ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை எதிரொலி காசிமேட்டில் குவிந்த மக்கள் கூட்டம்: வஞ்சிரம் கிலோ ரூ.1,300, சங்கரா ரூ.450, நண்டு ரூ.400, நெத்திலி ரூ.250க்கு விற்பனை

சென்னை: ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று சென்னை காசிமேட்டில் மீன்வாங்க மக்கள் கூட்டம் கடந்த வாரத்தை விட அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம் கிலோ ரூ.1,300, சங்கரா ரூ.450, நண்டு ரூ.400, நெத்திலி ரூ.250க்கு விற்பனையானது. விலை அதிகரித்தபோதிலும் விலையை பொருட்படுத்தாமல் மீன்களை மக்கள் வாங்கி சென்றனர். சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் அதிக அளவில் கூடுவது வழக்கமாக இருந்து வருகிறது. மீன்களை வாங்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், அருகில் உள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என அதிகாலை காலை முதலே குவிய தொடங்குகின்றனர்.

இதனால், காசிமேடு துறைமுகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா கூட்டம் போல மக்கள் வெள்ளம் காணப்படும். இந்நிலையில் இது ஆடி மாதம் ஆகும். ஆடி மாதத்தில் அம்மனுக்கு கூழ் வார்த்து, படையலிட்டு வழிபடுவது வழக்கம். அந்த ஆடி மாத படையலில் மீன் வகை உணவுகளும் இடம்பெறும். அது மட்டுமல்லாமல் ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை வேறு. இதனால், நேற்று அதிகாலை முதல் சென்னை காசிமேடு துறைமுகத்தில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

அதே நேரத்தில் மீன் வரத்தும் அதிகரித்து காணப்பட்டது. ஆனால், மீன் விலையும் அதிகரித்து இருந்தது. இதனால், விலையை பொருட்படுத்தாமல் காசிமேட்டில் திரண்ட மக்கள் மீன்களை வாங்கி சென்றனர். அதாவது வஞ்சிரம் கிலோ ரூ.1,300, வெள்ளை நிற வவ்வால் ரூ.1,250, சங்கரா பெரியது ரூ.450, நண்டு ரூ.400, பெரிய வகை கடமா ரூ.400, இறால் ரூ.450, நெத்திலி ரூ.250, சீலா ரூ.300, மத்தி 250 என விற்பனையானது. இதே போல சென்னை சிந்தாதிரிப்பேட்டை மார்க்கெட், பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியிலும் மீன் வாங்க மக்கள் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகமாக இருந்தது.

The post ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை எதிரொலி காசிமேட்டில் குவிந்த மக்கள் கூட்டம்: வஞ்சிரம் கிலோ ரூ.1,300, சங்கரா ரூ.450, நண்டு ரூ.400, நெத்திலி ரூ.250க்கு விற்பனை appeared first on Dinakaran.

Tags : Adi ,Ereoli Kasimat ,Shankara ,Anchovies ,CHENNAI ,Aadi ,Chennai Kasimet ,Echoli Kasimet ,Vanjiram ,Sankara ,Dinakaran ,
× RELATED மகத்துவம் நிறைந்த தேங்காய்