×

சென்னையில் பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் விரல் விட்டு எண்ணும் அளவில் பங்கேற்ற தொண்டர்கள்: எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சி

சென்னை: கர்நாடகாவின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜ சார்பில் தமிழகத்தில் உள்ள ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் ஜூலை 23ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜ தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி பாஜ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜ துணை தலைவர்கள், பொது செயலாளர்கள், மாநில செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை 200 வார்டுகளில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மேற்கு மாம்பலம் 135 வார்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். இதில் சுமார் 25 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை பார்த்து எச்.ராஜா அதிர்ந்து போனார். ஆனால், பாதுகாப்புக்காக 10க்கும் மேற்பட்ட போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

இதேபோல சென்னையில் உள்ள மற்ற வார்டுகளில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் விரல் விட்டு என்னும் அளவுக்கே தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்ற நியமிக்கப்பட்டிருந்த துணை தலைவர்கள், பொது செயலாளர், மாநில செயலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். தலைமை அறிவித்து விட்டது. வந்தோம் என்று சொல்லி, இருந்த கூட்டத்தின் மத்தியில் பேசிவிட்டு புறப்பட்டு சென்றனர். அதே நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வழியாக சென்ற மக்கள் கூட்டத்தை பார்த்து கமெண்ட் அடித்து சென்ற காட்சியை காண முடிந்தது.

* மேற்கு மாம்பலம் 135 வார்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். இதில் சுமார் 25 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டத்தை பார்த்து எச்.ராஜா அதிர்ந்து போனார்.

The post சென்னையில் பாஜவினர் ஆர்ப்பாட்டத்தில் விரல் விட்டு எண்ணும் அளவில் பங்கேற்ற தொண்டர்கள்: எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bajavinar demonstration ,Chennai ,Karnataka government ,Karnataka ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...