×

மேகதாது அணைக்கான அனுமதி திரும்ப பெற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: ‘‘பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை : மேகதாது அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து காவிரி. வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க ஒன்றிய அரசு அளித்த அனுமதி தவறு. அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறித்தான் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. வரைவு திட்ட அறிக்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு விட்டால், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை செல்லாததாகி விடும். அதனால், மேகதாது அணை குறித்த எந்த பணிகளையும் கர்நாடக அரசு மேற்கொள்ள முடியாது. எனவே, மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை ஒன்றிய அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். அதேபோல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான இத்தகைய செயல்களுக்கு தடை விதிக்க வேண்டும். கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உடனடியாக வழக்கு தொடர வேண்டும்.

The post மேகதாது அணைக்கான அனுமதி திரும்ப பெற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbaramani ,Chennai ,Pambagala ,Anmani ,Kaviri ,Cloudadi ,Dam ,CloudDam ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...