×

சிறுபான்மை இயக்கங்களை ஒடுக்கவே என்ஐஏ சோதனை: எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் பேட்டி

நெல்லை: சிறுபான்மை இயக்கங்களை ஒடுக்கவே எனது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்று நெல்லையில் எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்தார்.
நெல்லையில் நேற்று எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் முபாரக் வீட்டில் 4 மணி நேரம் என்ஐஏ அதிகாரிகளின் சோதனை நடத்திச் சென்றனர். சோதனை முடிந்த பின் வீட்டிலிருந்து வெளியே வந்த நெல்லை முபாரக் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கும், எஸ்டிபிஐக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
இந்த கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் இன்று (ஜூலை 23) அதிகாலை 5.45 மணியளவில் எனது வீட்டிற்கு சோதனை நடத்த வந்தனர்.

வீட்டை தலைகீழாக புரட்டிப் போட்டு சோதனை நடத்தியும் எதையும் அவர்கள் கைப்பற்றிச் செல்லவில்லை. அவர்களுக்கு இந்த சோதனை ஏமாற்றத்தில் தான் முடிந்துள்ளது. எனது செல்போனை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை போல் என்ஐஏவை வைத்து சிறுபான்மை அமைப்புகளை ஒன்றிய பாஜவினர் அச்சுறுத்தி ஒடுக்க நினைக்கின்றனர். இந்த வழக்கை நீதிமன்றம் மூலம் நாங்கள் சந்திப்போம்.

மக்கள் மன்றம் மூலம் என்ஐஏவின் முகத்திரையை கிழிப்போம். என்ஐஏ அதிகாரிகளின் சோதனையை, நரேந்திர மோடி விசாரணை என்று தான் சொல்ல வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் எஸ்டிபிஐயின் நடவடிக்கைகளை ஒடுக்குவதற்காகவே இந்த சோதனை நடத்தியுள்ளதாக கருதுகிறோம். நாங்கள் ஜனநாயக வழியில் ஒன்றிய அரசின் அத்துமீறல்களை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம். இந்த சோதனைகளுக்கு எல்லாம் எஸ்டிபிஐ அஞ்சாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post சிறுபான்மை இயக்கங்களை ஒடுக்கவே என்ஐஏ சோதனை: எஸ்டிபிஐ மாநில தலைவர் முபாரக் பேட்டி appeared first on Dinakaran.

Tags : NIA ,STBI ,Mubarak ,Nellai ,state chief ,Dinakaran ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்