×

நாடாளுமன்றத்தில் இடையூறு, அமளி ஏற்படுத்துவது ஜனநாயகம் ஆகாது: துணை ஜனாதிபதி தன்கர் பேச்சு

புதுடெல்லி: உரையாடல், விவாதம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஜனநாயகம் என்றும் நாடாளுமன்றத்தில் இடையூறு என்பது ஜனநாயகத்தின் மதிப்புகளுக்கு எதிரானது என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறினார். டெல்லியில் உள்ள ஜமியா மிலியா பல்கலைகழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பேசியதாவது: ஜனநாயகம் என்பது மக்களுக்கு நன்மை பயக்கும் அளவில் பேச்சு, விவாதங்கள் போன்றவை நடக்கிற அளவில் இருக்க வேண்டும். நிச்சயமாக இடையூறு, அமளி போன்றவை ஏற்படுத்தும் விதமாக இருக்கக்கூடாது. ஜனநாயக மாண்புகளின் சாராம்சத்தைப் பாதுகாக்கவும், நிலைநிறுத்தவும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

ஒவ்வொரு நொடியும் நாடாளுமன்றத்தை செயல்படாமல் இடையூறு ஏற்படுத்தி முடக்குவதற்கு எந்த காரணமும் இருக்க முடியாது. இதற்கு நாட்டு மக்கள் பெரும் விலை கொடுக்கின்றனர்.ஒரு குறிப்பிட்ட நாளில் நாடாளுமன்றத்தில் இடையூறு ஏற்படும்போது, கேள்வி நேரம் நடக்காது. கேள்வி நேரம் என்பது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உருவாக்குவதற்கான ஒரு செயல் முறை. ஒவ்வொரு கேள்விக்கும் பதிலளிக்க அரசு கடமைப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு பெரும் நன்மை கிடைக்கும். கருத்து வேறுபாடு என்பது ஜனநாயக செயல்முறையின் இயல்பான பகுதியாகும். ஆனால் கருத்து வேறுபாட்டை பகைமையாக மாற்றுவது ஜனநாயகத்திற்கு சாபக்கேடு. எதிர்ப்பு என்பது பழிவாங்கல் ஆக மாறிவிடக் கூடாது. பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான ஒரே வழி என்றார்.

The post நாடாளுமன்றத்தில் இடையூறு, அமளி ஏற்படுத்துவது ஜனநாயகம் ஆகாது: துணை ஜனாதிபதி தன்கர் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Vice President ,Thankar ,New Delhi ,Parliament ,Dinakaran ,
× RELATED நகை வழிப்பறி செய்த வழக்கில் பா.ஜ.க பிரமுகருக்கு 3 ஆண்டு சிறை..!!