×

மருத்துவ திட்டங்கள் பயனாளிகளை சென்றடைய 4 புதிய திட்டங்கள்

புதுடெல்லி: இதுகுறித்து ஒன்றிய சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘மருத்துவ திட்டங்கள் பயனாளிகளை சென்றடைய ஆயுஷ்மான் ஆப்கே துவார் 1 மற்றும் 2 ஆகிய திட்டங்கள் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து ஆயுஷ்மான் ஆப்கே துவார் 3.0, ஆயுஷ்மான் சபா,ஆயுஷ்மான் மேளா, ஆயுஷ்மான் கிராமம் ஆகிய திட்டங்கள் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆயுஷ்மான் சபா என்பது கிராம அளவிலான சுகாதார திட்டம். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சுகாதார திட்டத்தின் பயன்கள் மக்களை சென்றடையும் வகையில் இது செயல்படுத்தப்படும். மேலும், பிரதமரின் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் மற்றும் அதன் வினியோகம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

ஆயுஷ்மான் மேளா திட்டத்தின்படி மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஆயுஷ்மான் கிராமம் என்பது மருத்துவ காப்பீடு அட்டை வினியோகம், நோய் தடுப்பு மற்றும் தொற்று அல்லாத நோய்கள் பரிசோதனை ஆகியவை 100 சதவீத இலக்கை அடைந்தால் அந்த கிராமத்துக்கு சான்றிதழ் வழங்கப்படும்’’ என்றனர்.

The post மருத்துவ திட்டங்கள் பயனாளிகளை சென்றடைய 4 புதிய திட்டங்கள் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Health Department ,Ayushman Apk Duar 1 ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு