×

ஜம்முவில் இருந்து மேலும் 3,691 பக்தர்கள் அமர்நாத் பயணம்: இதுவரை ரூ.3.20 லட்சம் பேர் தரிசனம்

ஜம்மு: தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை 62 நாட்களுக்கு நடக்கிறது. இந்நிலையில் 3,691 பக்தர்கள் அடங்கிய 21வது குழு 141 வாகனங்களில் நேற்று அதிகாலை பகவதி நகர் அடிப்படை முகாமில் இருந்து அமர்நாத்துக்கு புறப்பட்டு சென்றனர். 2,203 பக்தர்கள் பஹல்காம் முகாமுக்கும், 1,488 பக்தர்கள் பால்டால் முகாமுக்கும் புறப்பட்டனர். ஜம்மு உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருவதால் பக்தர்கள் மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அமர்நாத் யாத்திரை தொடங்கிய நாளிலிருந்து இதுவரை ரூ.3.20 லட்சம் பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

The post ஜம்முவில் இருந்து மேலும் 3,691 பக்தர்கள் அமர்நாத் பயணம்: இதுவரை ரூ.3.20 லட்சம் பேர் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Amarnath ,Jammu ,Himalayas of South Kashmir ,
× RELATED ஜூன் 29 அமர்நாத் யாத்திரை தொடக்கம்