×

ஊஞ்சல் விளையாடிய போது கயிறு இறுக்கி சிறுமி சாவு

கண்ணமங்கலம்: திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே கொங்கராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஹரிபாபு(32), வேன் டிரைவர். இவரது மனைவி விஜயலட்சுமி(29). மகள் ரூபினா(7), மகன் தர்ஷன்(5). இவர்களில் ரூபினா அங்குள்ள பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். வார விடுமுறை என்பதால் நேற்று சிறுமி, தம்பியுடன் வீட்டில் கட்டியிருந்த ஊஞ்சலில் விளையாடினாள். அப்போது சிறுமியின் கழுத்தில் ஊஞ்சல் கயிறு இறுக்கியது. இதில் ரூபினா அதே இடத்தில் மயங்கி விழுந்தாள். இதை பார்த்து தம்பி சத்தம் போடவே பெற்றோர் உள்ளே வந்து பார்த்தனர். அதற்குள் சிறுமி ரூபினா இறந்தது தெரிந்து கதறி அழுதனர். இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post ஊஞ்சல் விளையாடிய போது கயிறு இறுக்கி சிறுமி சாவு appeared first on Dinakaran.

Tags : Kannamangalam ,Haribabu ,Kongarambatu ,Tiruvannamalai district ,Vijayalakshmi ,
× RELATED ரூ.10,000 லஞ்சம் ; பெண் தாசில்தார் கைது