×

குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத சனிக்கிழமைகளில் ஆடி பெருந்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். அதன்படி நேற்று ஆடி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு, கருடன் வானத்தில் சுற்றியவுடன் காக்கை சின்னம் பொருத்திய கொடியை ஏற்றி ஆடிப்பெருந்திருவிழா கோலாகலமாக துவங்கியது. இதில் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் எள் விளக்கேற்றி வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான சனீஸ்வர பகவான் – நீலாதேவி திருக்கல்யாண நிகழ்வு ஆக.4ம் தேதி நடைபெறும். 4வது மற்றும் 5வது வார சனிக்கிழமைகளுக்கு இடையே சோனை கருப்பண சுவாமிக்கு சிறப்பு பொங்கல் வைத்து சேவல் மற்றும் ஆட்டுக்கிடா வெட்டி பூஜைகள் நடைபெறும். குச்சனூர் பேரூராட்சி சார்பில் திருவிழாவிற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக குடிநீர், கழிப்பிடம் வசதிகள் செய்யப்பட்டிருந்தது. இத்திருவிழாவையொட்டி தேனியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போடி டிஎஸ்பி பெரியசாமி தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

The post குச்சனூர் சனீஸ்வரன் கோயிலில் ஆடி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Adi Parandrishwa Festival ,Kuchanur Chaniswaran Temple ,Chinnamanur ,Adi Pluntikra Festival ,Khuchanur Chaniswaran Temple ,Honey ,District ,Audi Plane Festival ,Kuchanur Chaneswaran Temple ,
× RELATED சின்னமனூர் ஓடைப்பட்டி பொன்ராஜ் குளத்தில் பெயரளவு ஆக்கிரமிப்பு அகற்றம்