×

சிவகாசி அருகே பாலத்தின் பக்கவாட்டில் தடுப்பு அமைப்பு: வாகன ஓட்டிகள் நிம்மதி

சிவகாசி: சிவகாசி அருகே மாநில நெடுஞ்சாலையில் தினகரன் செய்தி எதிரொலியாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. சிவகாசியில் இருந்து விஸ்வநத்தம் வழியாக சாத்தூர் மாநில நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் ஆனைக்குட்டம் அருகில் உள்ள மாலையம்மன் கோவில் பாலத்தின் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. இந்த பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த சாலை வழியாக பட்டாசு தொழிலாளர்கள் வாகனம், பள்ளி வாகனம், அரசு பேருந்துகள் அதிக அளவில் செல்கின்றன. பாலம் சாலை திருப்பத்தில் அமைந்துள்ளது. இங்கு சாலை புதிதாக போடப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அசுர வேகத்தில் செல்கின்றனர். பாலத்தின் பக்க வாட்டில் உள்ள திருப்பத்தில் தடுப்புகள், எச்சரிக்கை போர்டு எதுவும் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் ஆபத்து இருந்தது. பாலத்தின் பக்கவாட்டில் 5 அடி ஆழத்தில் பெரிய ஓடை உள்ளது.

இந்த ஓடை வழியாக விஸ்வநத்தம், சித்துராஜபுரம், கொங்கலாபுரம் பகுதி மழைநீர் சென்று மீனம்பட்டி கண்மாயில் கலக்கிறது. மழை காலங்களில் இந்த ஓடையில் மழைநீர் பாலத்தின் மேல் நிரம்பி செல்லும். பக்கவாட்டில் உள்ள பள்ளம் தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்கினால் அதிக உயிர் பலிகள் ஏற்படும் ஆபத்து நிலவியது. இது குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடாந்து நெடுஞ்சாலை துறையினர் பாலத்தின் பக்க வாட்டில் தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். இதற்கு வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

The post சிவகாசி அருகே பாலத்தின் பக்கவாட்டில் தடுப்பு அமைப்பு: வாகன ஓட்டிகள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Shivakasi ,Dinakaran ,Sivagasi ,Viswanatam ,Sathur ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...