
திருச்சுழி, ஜூலை 23: விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள வீரசோழனில் டாஸ்மாக் கடை உள்ளது. கடந்த மே 27ம் தேதி இரவு டூவீலரில் வந்த 3 மர்மநபர்கள் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து அங்கிருந்த மதுபான பாட்டில்களை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து சூப்பர்வைசர் இருளாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில், வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாஸ்மாக் கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிப்பதிவுகளை வைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதில், ஏற்கனவே இந்த கடையில் கொள்ளை முயற்சியில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா மறவமங்கலம் பகுதியைச் சேர்ந்த குணா (எ) குணசேகரன் (22) மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூர் பண்டாரம் தெருவை சேர்ந்த முகம்மது யூசுப் (19), மானாமதுரையை சேர்ந்த சிவபாலன் ஆகியோர் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து குணா என்ற குணசேகரன், முகம்மது யூசுப் ஆகியோரை கைது செய்த போலீசார் முக்கிய குற்றவாளியான சிவபாலனை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருச்சுழியில் பதுங்கியிருந்த சிவபாலனை (21) நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்து திருச்சுழி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post டாஸ்மாக் கொள்ளை மேலும் ஒருவர் கைது appeared first on Dinakaran.