×

கம்பம் நகராட்சியில் புதிய கமிஷனர் பொறுப்பேற்பு

கம்பம், ஜூலை 23: கம்பம் நகராட்சியில் கமிஷனராக பணிபுரிந்து வந்த பாலமுருகன் கடந்த மாதம் 27ம் தேதி தென்காசி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக தேனி நகராட்சி கமிஷனராக கணேசன் (பொ) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கம்பம் நகராட்சிக்கு புதிய கமிஷனராக வாசுதேவன் பொறுப்பேற்றார்.

அவரை நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம், கணக்கர் நாகராஜ், சுகாதார அலுவலர் அரசகுமார், கட்டிட ஆய்வாளர் சலீம், வருவாய் ஆய்வாளர் ராமசாமி, உதவிபொறியாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர். புதிய ஆணையாளராக பொறுப்பேற்ற வாசுதேவன் சீர்காழி நகராட்சி கமிஷனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கம்பம் நகராட்சியில் புதிய கமிஷனர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Kampam Municipality ,Kampam ,Balamurugan ,Tenkasi Municipality ,Dinakaran ,
× RELATED கம்பம் பகுதியில் அறுவடை முடிந்த...