×

மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைந்தது

ஈரோடு, ஜூலை23: ஈரோடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து அதிகரிப்பால் விலை சரிவடைந்துள்ளது. ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் செயல்படும் நேதாஜி தினசரி மார்க்கெட்டிற்கு ஈரோடு, கோபி, சத்தி, அந்தியூர், தாளவாடி, கொடுமுடி மற்றும் ஊட்டி, கோத்தகிரி, கிருஷ்ணகிரி, கர்நாடகா மாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடந்த சில வாரங்களாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து பாதியாக குறைந்தது. இதன்காரணமாக தக்காளி விலை ஒரு கிலோ ரூ.140 வரையும், சின்ன வெங்காயம் ரூ.160 வரையும் விற்பனையானது.

இதேபோல் பச்சை மிளகாய், பீன்ஸ், கேரட், அவரை போன்ற காய்கறிகளும் ரூ.100ஐ தாண்டி விற்பனையானது. இந்நிலையில் ஈரோடு மார்க்கெட்டுக்கு மீண்டும் காய்கறிகள் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதில், நேற்று ஈரோடு மார்க்கெட்டுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து 130 டன் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதனால், சில காய்களின் விலை கடந்த வாரத்தை விட குறைந்து விற்பனையானது.குறிப்பாக கடந்த வாரம் ரூ.110க்கு விற்பனையான பச்சை மிளகாய் நேற்று ஒரு கிலோ ரூ.60க்கும், ரூ.160க்கு விற்பனையான சின்னவெங்கயம் ரூ.120க்கும், ரூ.120க்கு விற்பனையான தக்காளி ரூ.90 முதல் ரூ.100 வரையும் விற்பனையானது.

இதேபோல், ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான இதர காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு: கத்திரிக்காய்-ரூ.60, வெண்டைக்காய்-ரூ.40, முள்ளங்கி-ரூ.20, பாகற்காய்-ரூ.65, பீர்க்கங்காய்-ரூ.45, புடலங்காய்-ரூ.40, சுரைக்காய்-ரூ.20, முருங்கைக்காய்-ரூ.50, அவரைக்காய்-ரூ.120, கேரட்-ரூ.70, பீட்ரூட்-ரூ.60, பீன்ஸ்-ரூ.100, முட்டைகோஸ்-ரூ.25, காலிபிளவர்-ரூ.50, உருளைக்கிழங்கு-ரூ.40, பெரிய வெங்காயம்-ரூ.35, குடைமிளகாய்-ரூ.120, இஞ்சி-ரூ.300 ஆகிய விலைகளில் விற்பனையானது.

The post மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரிப்பால் காய்கறிகள் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode V.U.C. ,Netaji ,Maidan ,Dinakaran ,
× RELATED ஈரோடு நேதாஜி சாலையில் புதுப்...