×

அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்த சிறந்த நடத்துனருக்கு பாராட்டு சான்று திருவண்ணாமலை மாவட்ட அளவில்

செங்கம், ஜூலை 23: திருவண்ணாமலை மாவட்ட அளவில் அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்த சிறந்த நடத்துனருக்கு பாராட்டு சான்று வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட அளவில் அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்த நடத்துனர் மோகன் குமார் என்பவர் சென்னை தரமணியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடத்துநர் மற்றும் ஓட்டுநர்களுக்கு நடைபெற்ற விழிப்புணர்வு பயிற்சியில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பணிக்காலத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் நல்லுறவு ஏற்படும் வகையில் செயல்பட்டமைக்காகவும், அதேபோல் அரசு போக்குவரத்து பணிமனையில் லாப நோக்குடன் பணிபுரிந்து அரசுக்கு வருவாய் இயற்றிய வகையிலும், பணியின் போது சிறப்புடனும், நேர்மையாகவும் பணியாற்றியமைக்கும் சிறந்த நடத்துனர் நடத்துனருக்கான பாராட்டு சான்று சென்னை தரமணியில் போக்குவரத்து தலைமை அலுவலகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது. பாராட்டு சான்று பெறப்பட்ட நடத்துனர் மோகன் குமார் செங்கம் அரசு போக்குவரத்து கிளை மேலாளர் சேட்டுவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

The post அரசு போக்குவரத்து பணிமனையில் பணிபுரிந்த சிறந்த நடத்துனருக்கு பாராட்டு சான்று திருவண்ணாமலை மாவட்ட அளவில் appeared first on Dinakaran.

Tags : workshop ,Tiruvannamalai ,Sengam ,Government Transport Workshop ,Dinakaran ,
× RELATED தி.மலை அண்ணாமலையார் கோயிலில் 27ம்தேதி முதல் தீப மை விநியோகம்