×

கொரியா ஓபன் பேட்மின்டன் பைனலில் சாத்விக் – சிராக்

யோசு: கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் விளையாட இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் – சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றது. அரையிறுதியில் சீனாவின் வேய் கெங் லியாங் – சாங் வாங் இணையுடன் நேற்று மோதிய இந்திய இணை 21-15 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றது. 2வது செட்டில் சீன ஜோடி கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் இழுபறியாக நீடித்தது. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் சாத்விக் – சிராக் ஜோடி 21-15, 24-22 என்ற நேர் செட்களில் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இப்போட்டி 40 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனல் இன்று நடைபெற உள்ளது. ஜூன் மாதம் நடந்த இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் போட்டியில் சாத்விக்/சிராக் இணை சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில் மீண்டும் பைனலுக்கு முன்னேறி இருப்பது இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

The post கொரியா ஓபன் பேட்மின்டன் பைனலில் சாத்விக் – சிராக் appeared first on Dinakaran.

Tags : Sadwik ,Korea Open Badminton Final ,Chirac ,Yozu ,India ,Sadwiksairaj ,Korea Open badminton series ,Shetty ,Dinakaran ,
× RELATED ஆசிய விளையாட்டு பேட்மிண்டன்...