×

கோடியூர் சேகர புனித பவுல் ஆலய அர்ப்பணிப்பு விழா

தக்கலை, ஜூலை 23: கோடியூர் சேகர புனித பவுல் ஆலய அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. 120 ஆண்டுகளுக்கு முன் கோடியூர் சிஎஸ்ஐ சர்ச் ஓலை கூரையில் செயல்பட்டது. தொடர்ந்து ஆலயம் ஓட்டு கட்டிடமாக மாற்றப்பட்டு சுமார் 119 ஆண்டுகளாக அதில் செயல்பட்டது. 120வது ஆண்டையொட்டி சபை மக்களால் புதிய ஆலயம் பிரமாண்டமாக கட்டப்பட்டது. இதையடுத்து ஆலய அர்ப்பண விழா நடந்தது. புதிய ஆலய அர்ப்பணிப்பு விழாவிற்கு ெதன்னிந்திய திருச்சபையின் குமரி பேராயர் செல்லையா தலைமை வகித்தார்.

கோடியூர் தலைமை போதகர் யோனத்தான், உதவி போதகர் ஜெஸ்பேள் ராபின் மற்றும் கோடியூர் சேகரத்துக்குட்பட்ட போதகர்கள் முன்னிலை வகித்தனர். பிரதம பேராயர் தர்மராஜ் ரசாலம் புதிய ஆலயத்தை அர்ப்பணம் செய்து வைத்தார். தொடர்ந்து இறைவேண்டல் நடத்தப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக குழந்தைகளுக்கு ஞானஸ்தானம் வழங்கப்பட்டது. ஆலய சிறப்பு மலரை பிரதம பேராயர் வெளியிட கோடியூர் புனித பவுல் சேகர போதகர், உதவி போதகர் மற்றும் ஆதின நிதி காப்பாளர் பைஜு நிசித்பால், பேராய நிர்வாக செயலாளர் தினேஷ் உட்பட பலர் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில், சபை செயலாளர் ரவி வரவேற்றார். முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா அதிபர் டோமினிக் எம். கடாட்சதாஸ் உட்பட பலர் பேசினர்.

அர்ப்பண விழாவில் விஜய் வசந்த் எம்.பி., எம்எல்ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், மற்றும் சபை பொருளாளர் ஏனோஸ் , கணக்கர் எட்வர்ட்சாம், கட்டிக்குழு கன்வீனரும் முன்னாள் முளகுமூடு பேரூராட்சி தலைவருமான ஐசக் ராபி ,ஞானராபின்சன், ஜெயசிங், ராபர்ட் கிளைவ், கிறிஸ்டி விமலா, சுந்தர் சிங், ஜாண், சன்லின்சில்வான்ஸ், விஜில் குமார், மேபல் கில்டா, செல்வின் சாம், மனோராஜன், தயா சிங் மற்றும் ஆதின உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மதியம் அன்பு விருந்து நடந்தது.

The post கோடியூர் சேகர புனித பவுல் ஆலய அர்ப்பணிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : St. Paul ,Church ,Kodiyur Sekara ,Thakkalai ,Kodiyur… ,Kodiyur Sekara St. Paul Church ,Dinakaran ,
× RELATED இனி மணலில் நடக்க தேவையில்லை தனுஷ்கோடி...