×

ரோகிணி பொறியியல் கல்லூரி சார்பில் தானியங்கி தொழில் நுட்ப சர்வதேச மாநாடு

அஞ்சுகிராமம், ஜூலை 23: ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை சார்பில் தானியங்கி, நுண்ணறிவுக் கணினி மற்றும் தகவல்தொடர்பு குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்ஸி ஜியோ ஆகியோர் தலைமை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜேஷ் முன்னிலை வகித்து பேசினார். டாக்டர் தேவி மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை பேராசிரியர் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை தலைவர் மோகனலட்சுமி, மாநாட்டின் கருப்பொருள் மற்றும் நோக்கத்தை வெளியிட்டார்.

பேராசிரியர் ரெஜி தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் சுபோதா அமர்வு நபர்களை அறிமுகம் செய்தார். வெண்ணிலா, பேராசிரியர், நூருல் இஸ்லாம் உயர்கல்வி மையம், முத்துமணிகண்டன் பேராசிரியர் விஐடி சென்னை, யு.டி.எஸ்.பிள்ளை ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ஆட்டோமேஷன் தொழில்நுட்பத்தின் ஆட்டோமேஷன் மற்றும் தேவை குறித்து எடுத்துரைத்தனர். பேராசிரியை பெனிஷா நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் பல்வேறு தொழில்துறை, கல்வித்துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

The post ரோகிணி பொறியியல் கல்லூரி சார்பில் தானியங்கி தொழில் நுட்ப சர்வதேச மாநாடு appeared first on Dinakaran.

Tags : International Conference on Automation Technology ,Rohini College of Engineering ,Anjugram ,Rohini College of Engineering and Technology Electronics and Information Technology Department of Automation ,Rohini Engineering College ,Automation Technology International Conference ,Dinakaran ,
× RELATED ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்