×

நிலக்கரி வரி விதிப்பு ஊழல் வழக்கில் சட்டீஸ்கரில் பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது

சட்டீஸ்கர்: சட்டீஸ்கரில் நிலக்கரி வரி விதிப்பு ஊழல் வழக்கில் பெண் ஐஏஎஸ் அதிகாரி ராணு சாஹுவை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. சட்டீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்புகளில் மிகப்பெரிய ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ராய்ப்பூரில் உள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி ராணு சாஹு மற்றும் கோர்பா முனிசிபல் கார்ப்பரேஷன் ஆணையர் பிரபாகர் பாண்டே ஆகியோர் வீடுகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்நிலையில் ராணு சாஹூவை அமலாக்கத்துறையினர் நேற்று கைது செய்தனர்.

2010ம் ஆண்டு சட்டீஸ்கர் பிரிவை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராணு சாஹு தற்போது மாநில வேளாண்மை துறை இயக்குநராக பதவி வகித்து வருகிறார். இதற்கு முன் நிலக்கரி வளம் நிறைந்த கோபார், ராய்கர் மாவட்டங்களின் ஆணையராக பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் கடந்த 2009ம் ஆண்டு சமீர் விஷ்னோய் என்ற ஐஏஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 2வதாக ராணு சாஹுவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post நிலக்கரி வரி விதிப்பு ஊழல் வழக்கில் சட்டீஸ்கரில் பெண் ஐஏஎஸ் அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : IAS ,Sattiskar ,Enforcement Department ,Ranu Sahua ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி...