×

தெலங்கானாவில் நவீன முறையில் 12 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்து கோடீஸ்வரரான விவசாயி: இதுவரை ரூ1.84 கோடி வருமானம்

திருமலை: தெலங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், கவுடிப்பள்ளி மண்டலம் முகமது நகரைச் சேர்ந்தவர் மகிபால். விவசாயியான இவர் 60 ஏக்கரில் காய்கறி சாகுபடி செய்து, நவீன முறையில் பயிரிட்டு வருகிறார். நவீன முறையில் சாகுபடி செய்வதால் தண்ணீர் குறைவாகவே பயன்படுவதாக கூறுகிறார். மகிபால் கோடை காலத்தில் 12 ஏக்கர் குடைமிளகாய் மற்றும் 12 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்தார். ஜூன் மூன்றாவது வாரத்தில் இருந்து தக்காளி அறுவடையானது. அதே சமயம் தக்காளி விலையும் அதிகரித்தது.

ஐதராபாத்தில் உள்ள போயின் பாலி, ஷாபூர் நகர் மற்றும் பட்டன் செருவு சந்தைகளில் மகிபால் தக்காளிகளை கொண்டு சென்று கிலோ ரூ150ல் இருந்து ரூ180 வரை விற்பனை செய்தார். அவ்வாறு ஒரு மாதத்தில் 8,000 தக்காளி பெட்டிகளை விற்றுள்ளார். சராசரியாக ஒரு நாளைக்கு 250 தக்காளிப் பெட்டிகளை விற்பனை செய்து வந்தார். அவ்வாறு இந்த மாதத்தில் ஒரு பெட்டிக்கு சராசரியாக ரூ2,300 வீதம் ரூ1.84 கோடி சம்பாதித்துள்ளார்.

The post தெலங்கானாவில் நவீன முறையில் 12 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்து கோடீஸ்வரரான விவசாயி: இதுவரை ரூ1.84 கோடி வருமானம் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Thirumalai ,Mahipal ,Mohammad Nagar, ,Gaudipalli Mandal, Medak District, Telangana State ,
× RELATED விரும்பிய பீர்களை குழாயில் பிடித்து...