×

கேரளா கோட்டக்கல் மருத்துவமனையில் ராகுலுக்கு ஆயுர்வேத சிகிச்சை தொடங்கியது: நாளை பிரியங்கா வருகை?

திருவனந்தபுரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கோட்டக்கல் ஆயுர்வேத மருத்துவமனையில் நேற்று சிகிச்சை தொடங்கியது. பிரியங்காவும் 24ம் தேதி இங்கு சிகிச்சைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடை பயணம் மேற்கொண்டார். நடைபயணத்தை முடித்த பின்னர் அவரது கால் மூட்டு பகுதியில் கடும் வலி ஏற்பட்டது.

இதற்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்ள கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கோட்டக்கல் ஆரிய வைத்தியசாலையில் ராகுல் காந்திக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களுக்கு முன் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தி கேரளாவுக்கு வந்தார். அதன்பின் கோட்டக்கலில் உள்ள ஆரிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்தார்.

அங்குவந்த ராகுல் காந்திக்கு ஆரிய வைத்தியசாலை தலைமை மருத்துவர் வாரியர் தலைமையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று அவருக்கு சிகிச்சை தொடங்கியது. ஒரு வாரத்திற்கு மேல் ராகுல் காந்திக்கு சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையே பிரியங்கா காந்தியும் ஆயுர்வேத சிகிச்சைக்காக கோட்டக்கல் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை (24ம் தேதி) அவரும் கோட்டக்கல் வருவார் என்று கூறப்படுகிறது.

The post கேரளா கோட்டக்கல் மருத்துவமனையில் ராகுலுக்கு ஆயுர்வேத சிகிச்சை தொடங்கியது: நாளை பிரியங்கா வருகை? appeared first on Dinakaran.

Tags : Rahul ,Kerala ,Kotakkal hospital ,Priyanka ,Thiruvananthapuram ,Former ,Congress ,President ,Rahul Gandhi ,Kotakal Ayurveda Hospital ,Kottakal ,
× RELATED கோட்சேவை பின்பற்றுபவர்களுக்கு...