×

பொது கரன்சியாக இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதி

கொழும்பு: இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டுநாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் இந்தியாவுக்கு வருகை தந்தார். . அப்போது இந்திய ரூபாயை இலங்கையில் பொதுகரன்சியாக பயன்படுத்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி கூறும்போது, “இலங்கையில் அமெரிக்க டாலர், சீனாவின் யென், யூரோ ஆகியவற்றை பயன்படுத்துவது போல் இந்திய ரூபாயையும் உள்ளூர் பரிமாற்றத்துக்கு பயன்படுத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்திய சுற்றுலா பயணிகள், தொழிலதிபர்கள் பல நாட்டு கரன்சிகளை வைத்திருப்பது தவிர்க்கப்படும். திரிகோணமலையை தொழில், எரிசக்தி மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான மையமான மாற்றும் இந்தியா இலங்கை ஒப்பந்தத்துக்கு சீனா எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” இவ்வாறு தெரிவித்தார்.

The post பொது கரன்சியாக இலங்கையில் இந்திய ரூபாயை பயன்படுத்த அனுமதி appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Colombo ,President ,Ranil Wickremesinghe ,India ,
× RELATED நாகையில் இருந்து இலங்கைக்கு மீண்டும்...