×

அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்க வேண்டும்: அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்திலுள்ள எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் இயங்குகின்றன. எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வில் அதிகளவில் மதிப்பெண்களை எடுத்த நம் மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டின் அடிப்படையில் சென்னை தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் இயங்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து மருத்துவ கல்வி பயில வேண்டும் என்ற விழிப்புணர்வு இயக்கத்தை முன்னின்று நடத்த வேண்டும். மேலும் அகில இந்திய ஒதுக்கீட்டில் பயிலும் மருத்துவ மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தமிழ்நாடு அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கு மருத்துவக் கல்விக்கான கலந்தாய்வு நடந்து வருவதால் இதற்கான முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

The post அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்களின் கல்வி கட்டணத்தை ஏற்க வேண்டும்: அரசுக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : India ,Tamil Nadu ,Jawahirullah ,Govt ,Chennai ,Humanist People's Party ,MH Jawahirullah ,MLA ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED கல்வி முன்னேற்றத்தில் தமிழ்நாடு...