×

மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் மற்றொரு குற்றவாளி இன்று கைது; இதுவரை 6 பேர் கைது.! காவல்துறை தகவல்

மணிப்பூர்: மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் மற்றொரு குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் கடந்த மே 4ம் தேதி முதல் பல்வேறு இன்னல்களுக்கும், பாலியல் வன்கொடுமைகளுக்கும் ஆளாகி வருகின்றனர். இதுதொடர்பான விவரங்கள் 75 நாட்களுக்கும் மேலாகி தற்போது தான் வெளியுலகிற்கு தெரிய வருகின்றன. அந்தவகையில் சமூகத்தைச் சேர்ந்த 2 பெண்களை மெய்தே இனத்தைச் சேர்ந்த கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வண்புணர்வு செய்யும் வீடியோ வெளியாகி, நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்திருந்தது.மேலும் இந்த விவகாரத்தில் 2 மாதங்களுக்கு பின்னர் தான் காவல்துறை FIR பதிவு செய்துள்ளது. இந்நிலையில் தற்போது மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வாக்கில் மற்றொரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர். ஐந்து முக்கிய குற்றவாளிகள் மற்றும் ஒரு சிறார் உட்பட மொத்தம் 6 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய இடங்களில் சோதனை நடத்தி மீதமுள்ள குற்றவாளிகளையும் கைது செய்ய மாநில காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மணிப்பூர் பாலியல் வன்கொடுமை வழக்கில் மற்றொரு குற்றவாளி இன்று கைது; இதுவரை 6 பேர் கைது.! காவல்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Manipur ,Cookie Tribe ,Dinakaran ,
× RELATED மணிப்பூரில் நிலநடுக்கம்