×

தமிழ் முகமூடி போட்டுக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என சிலர் தப்பு கணக்கு போடுகின்றனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: தமிழ் முகமூடி போட்டுக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என சிலர் தப்பு கணக்கு போடுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெற்ற முத்தமிழ்ப் பேரவையின் 42ம் ஆண்டு இசை விழாவில் பங்கேற்று விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இயல் செல்வம் விருது எஸ். ராஜாவுக்கும், இசை செல்வம் விருது எஸ்.மகதிக்கும் வழங்கப்பட்டது. ராஜ ரத்னா விருது கணேசனுக்கும், நாட்டிய செல்வம் விருது எஸ்.பழனியப்பனுக்கும் வழங்கப்பட்டது. வீணை செல்வம் விருது ராஜேஷ் வைத்யாவுக்கும், தவில் செல்வம் விருது கண்ணனுக்கும் வழங்கப்பட்டது.

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழ்ப் பேரவையின் 42 வது ஆண்டு இசைவிழாவில் பங்கேற்பதில் கிழ்ச்சி அடைகிறேன். இயல் செல்வம் விருது பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் ராஜா, இசை செல்வம் விருது பெற்ற பாடகி மகதிக்கு பாராட்டுக்கள். கலைஞர் பெயரால் முத்தமிழ்ப் பேரவை விருது வழங்க வேண்டும். சிலர் தமிழுக்கும், தமிழர்களுக்கு விரோதமான செயல்களை செய்துகொண்டே தமிழ் முகமூடி போட்டுக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என சிலர் தப்பு கணக்கு போடுகின்றனர். அவ்வாறு ஏமாற்றிவிடலாம் என தப்பு கணக்கு போடுவோருக்கு தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்களும் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

The post தமிழ் முகமூடி போட்டுக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என சிலர் தப்பு கணக்கு போடுகின்றனர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,G.K. Stalin ,Chennai ,Chief Minister ,Mukha ,B.C. G.K. Stalin ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...